2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (24.11.2011)

Menaka Mookandi   / 2011 நவம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (24.11.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 08ஆம் நாள் (24.11.2011) வியாழக்கிழமை. சித்த யோகமும் சதுர்த்தசி திதியும் விசாகம் நட்சத்திரம் காலை 04.07 மணிவரை பின்பு அனுஷம்.

ராகு காலம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை.
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.00 மணிவரை, மாலை 01.00 முதல் 1.30 மணிவரை.



மேடம்
புதிதாக தொடங்கிய காரியங்களில் வெற்றி, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தல்.
அஸ்வினி: உயர்வு
பரணி: முயற்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகிரகம்


இடபம்
பணம் சேமிப்பதில் ஊக்கம் தேவை, மனதளவில் அலைச்சல்கள் ஏற்படக்கூடும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: கலக்கம்
ரோகிணி: சங்கடம்
மிருகசீரிடம் 1, 2: அக்கரை


மிதுனம்
பெண்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும், நல்ல காரியங்களில் அக்கரை செலுத்தவும், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் துன்பம்.
மிருகசீரிடம் 2, 3: இறைசிந்தனை 
திருவாதிரை: நாவடக்கம்
புனர்பூசம்: துக்கம்


கடகம்
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, நண்பர்களின் உதவி கிடைக்கும்.
புனர்பூசம்: மேன்மை
பூசம்: ஆதாயம்
ஆயில்யம்: குடும்ப ஒற்றுமை


சிம்மம்
நமக்கு முன்மாதிரியாக விளங்கும் பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், மன பயங்கள் ஏற்படும்.
மகம்: நல்வழி
பூரம்: சிரமம்
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி


கன்னி
அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், நல்ல உறக்கம் கிடைக்கும், குடும்பத்தாருடன் புண்ணிய ஸ்தலங்கள் செல்லுதல்.
உத்திரம் 2, 3, 4: நிம்மதி
அஸ்தம்: பிரார்த்தனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: தொடர்புகள்


துலாம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும், பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்மைக்கே, சில விதமான குழப்பங்கள் தோன்றும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெறுப்பு
சுவாதி: விசித்திரம்
விசாகம் 1, 2, 3: பொறுமை


விருட்சிகம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, நட்பு வட்டம் விரிவடைதல்.
விசாகம் 4: மேன்மை
அனுசம்: செலவு
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல்,  அதிகாரிகளுடன் சில மனக் கசப்புக்கள் ஏற்படும்.
மூலம்: நம்பிக்கை
பூராடம்: பகை
உத்திராடம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்


மகரம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், உற்சாகத்துடன் இறை வழிபாடுகளில் ஈடுபடுவதால் நன்மை, நண்பர்களின் வருகையினால் மகிழ்ச்சி.
உத்திராடம் 2, 3, 4: சுபம்
திருவோணம்: புத்துணர்ச்சி
அவிட்டம் 1, 2: நட்பு


கும்பம்
புதுமையான பொருள் காணக்கிடைக்கும், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயற்படவும், பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் பகை.
அவிட்டம் 3, 4: கவலை
சதயம்: விசித்திரம்
பூரட்டாதி 1, 2, 3: மனஸ்தாபம்


மீனம்
நண்பர்களின் மூலம் செய்திகள் கிடைக்கும், புதிய ஆடை அணிகளன்கள் சேருதல், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: நற்செய்தி
ரேவதி: அதிர்ஷ்டம்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X