Shanmugan Murugavel / 2016 மார்ச் 07 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல்களில், மேய்னில் இடம்பெற்ற பிரதிநிதிகள் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பாக பேர்ணி சான்டர்ஸ் வெற்றிபெற்றார். புவேர்ட்டோ றிக்கோவில் இடம்பெற்ற முதன்மைத் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பாக மார்க்கோ றூபியோ வெற்றிபெற்றார்.
பெரும் சனிக்கிழமையன்று இடம்பெற்ற 3 மாநிலங்களுக்கான தேர்தலில் இரண்டில் வெற்றிபெற்ற பேர்ணி சான்டர்ஸ், அந்த வெற்றிப் போக்கை மேலும் கொண்டு செல்வதற்கு, மேய்னில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டியேற்பட்டது. அங்கு சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்திய பேர்ணி சான்டர்ஸ், 64.3 சதவீத வாக்குகளைப் பெற்று, 15 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றார். ஹிலாரி கிளின்டன், 35.5 சதவீத வாக்குகளைப் பெற்று 7 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றார்.
புவேர்ட்டோ றிக்கோவின் இடம்பெற்ற முதன்மைத் தேர்தலில், மார்க்கோ றூபியோ வெற்றிபெற்றார். 71 சதவீத வாக்குகளைப் பெற்ற மார்க்கோ றூபியோ அதிரடி வெற்றிபெற, அக்கட்சியின் முதன்மை வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், 13 சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்றார். டொனால்ட் ட்ரம்ப்புக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட டெட் குரூஸ், 8 சதவீத வாக்குகளை மாத்திரம் பெற, ஜோன் கேசிச், ஒரு சதவீத வாக்குகளைப் பெற்றனர்.
3 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago