2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

‘இந்தியாவின் மகளே வருக’

Editorial   / 2017 மே 26 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பாகிஸ்தானியக் காதலரால், துப்பாக்கி முனையில் திருமணம் முடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தியப் பெண், இந்தியாவை நேற்று வந்தடைந்தார்.

உஸ்மா என்ற இப்பெண், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குச் செல்வதற்கு அனுமதி கோரி, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த மனுவில், இந்தியாவுக்குச் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே, இந்தியாவை அவர், நேற்று வந்தடைந்தார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநில ஓரமாக அமைந்துள்ள வாகா எல்லைப் பகுதியூடாக, இந்தியாவை அவர் வந்தடைந்தார். அப்போது அவர், இந்திய மண்ணைத் தொட்டு வணங்கிக் கொண்டே, இந்திய மண்ணுக்குள் காலடி எடுத்து வைத்தார்.

உஸ்மாவின் வருகை குறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், “இந்தியாவின் மகளே, வீட்டுக்கு வரவேற்கிறோம். நீங்கள் சந்தித்தவை குறித்து நான் வருத்தமடைகிறேன்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X