Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 25 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் உச்சநிலைத் தலைவரைத் தெரிவுசெய்வதற்குப் பொறுப்பான நிபுணர்கள் சபையின் தலைவராக, தீவிரப் போக்காளரான அஹ்மட் ஜன்னாட்டி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
88 பேரைக் கொண்ட இந்தச் சபையே, உச்சநிலைத் தலைவரைத் தெரிவுசெய்வதற்கும் நீக்குவதற்கும் கண்காணிப்பதற்குமான பொறுப்பைக் கொண்டது என்பதோடு, தங்களது தலைவரைத் தெரிவுசெய்வதற்காக, நேற்று செவ்வாய்க்கிழமை, வாக்களித்திருந்தது.
இதன்போதே, தலைவராக அஹ்மட் ஜன்னாட்டி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தெரிவு, இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற தேர்தல்களில், மறுசீரமைப்பாளர்களும் மிதவாதிகளும் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு, அடியாக அமைந்துள்ளது.
89 வயதான ஜன்னாட்டி, காப்பாளர் சபையினதும் தலைவராக உள்ளார். இச்சபையே, நாட்டின் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டமூலங்களை மேற்பார்வை செய்யவும், அதேபோல் பல்வேறான தேர்தல்களுக்கான வேட்பாளர்களை அங்கிகரிக்கும் பொறுப்பைக் கொண்டதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .