2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ்லாந்து எரிமலை குமுறல்;ஒரு பகுதி விமானசேவைகள் மீள் ஆரம்பம்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்லாந்திலுள்ள எரிமலைக் குமுறல் காரணமாக விமானசேவைகள் ரத்துச்செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று வட ஐரோப்பாவிலிருந்து ஒரு சில விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாரீஸ், அம்ஸ்டர்டாம் மற்றும் பிராங்பேர்ட் ஆகிய நாடுகள் தமது விமானசேவைகளை மீண்டும் ஆரம்பித்திருக்கும் அதேவேளை,  பிரிட்டன் தனது விமான நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது.  எனினும், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்தும் தமது வான்பரப்பை மூடியுள்ளன.

கடந்த வாரம் 95,000 விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.

கடந்த வாரம் குமுற ஆரம்பித்த  ஐஸ்லாந்திலுள்ள எரிமலை, தற்போது சாம்பல் புகையை விட அதிகளவு எரிமலைக் குழம்பை வெளித்தள்ள ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .