2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ஒசாமாவை நெருங்குவதாக அமெரிக்கா தகவல்

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

"அல்-குவைதா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லாடனையும், அவரது உதவியாளர் அய்மன் அல் ஜவாகிரியையும் நெருங்கி விட்டோம்' என்று, அமெரிக்க இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி, வடக்கு வாசிரிஸ்தானில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில், அல்-குவைதாவின் மூன்றாவது முக்கியத் தலைவரான முஸ்தபா அல் யாசித் கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், ஒசாமா பின்லாடனையும் அவருக்கு அடுத்ததாக செயலாற்றும் அய்மனையும் நெருங்கி விட்டதாக தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆப்கான், பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ள தீவிரவாதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாக வெளிநாட்டுத் தகவல்கள் கூறுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .