2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கிழக்கு அலெப்போவுக்கான இறுதி வழங்கற் பாதையும் துண்டிக்கப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் வடக்கிலுள்ள அலெப்போவில், எதிரணியினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு பகுதிக்கான அனைத்து வழங்கற் பாதைகளையும் அரசாங்கத்துக்கு ஆதரவான படைகள் மூடியுள்ளதாக சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சிரிய கண்காணிப்பகத்தின் தகவல்படி, கடந்த ஜூலை 11ஆம் திகதியே, அலெப்போவின் கிழக்குப் பகுதி, ஏறத்தாழ முற்றுகைக்குள்ளாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு விசுவாசமான படைகள், அண்மைய நாட்களில் மேலும் முன்னேறியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மன்பிஜிக்கு அருகில், ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுபவை தொடர்பாக உத்தியோகபூர்வ விசாரணையை ஆரம்பிப்பதுக்கு, போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய அமெரிக்க இராணுவம் புதன்கிழமை (27) தெரிவித்துள்ளது.

இது தவிர, வடக்கு சிரியாவிலுள்ள குர்திஷ் நகரொன்றை தாக்கிய இரண்டு குண்டு வெடிப்புகளில், குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் குழு உரிமை கோரியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .