Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 17 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு ஆபிரிக்காவில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக அடுத்த வருடத்தில், சிம்பாப்வேயின் கிராமப்புற சனத்தொகையின் அரைவாசியான ஏறத்தாழ ஐந்து மில்லியன் பேருக்கு உதவி தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இல்லாதளவுக்கு இவ்வருடம் வறட்சியை எதிர்நோக்கியுள்ளதால் 30 மில்லியன் மக்கள் ஆபத்திலுள்ள நிலையில், தெற்கு ஆபிரிக்காவின் மோசமாக பாதிக்கப்பட்ட மலாவி, ஸாம்பியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் சிம்பாப்வேயும் ஒன்றாகும்.
அண்மைய எதிர்காலத்தில் சிம்பாப்வேயில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டிருக்காத நிலையில், பேரழிவு நிலையினை அந்நாட்டு ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே பிரகடனம் செய்துள்ளார். இந்நிலையில், நாட்கணக்காக முறையான உணவை பிரஜைகள் பெறவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அயல் நாடுகளிலிருந்து தானியங்களை வாங்க முயற்சிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago