2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஜனநாயகக் கட்சித் தலைமைக்கு சான்டர்ஸைப் பிடிக்கவில்லை

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 24 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளராகுவதற்குப் போட்டியிட்ட பேர்ணி சான்டர்ஸை விட, மற்றைய வேட்பாளரான ஹிலாரி கிளின்டனுக்கு, அக்கட்சியின் தேசியச் செயற்குழு ஆதரவளித்ததாக, விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டுள்ள மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன.

செயற்குழுவின் முன்னிலை அதிகாரிகள் சிலரால் அனுப்பப்பட்ட அல்லது சிலருக்குக் கிடைத்த 20,000 மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. குறித்த மின்னஞ்சல்கள், எவ்வாறு கிடைக்கப்பெற்றன என்பதை விக்கிலீக்ஸ் வெளியிடாத நிலையில், கடந்த மாதம், தங்களது மின்னஞ்சல் வழங்கிகள், ரஷ்யாவைச் சேர்ந்தோரால் ஊடுருவப்பட்டதாக, செயற்குழு தெரிவித்தது.

ஜனநாயகக் கட்சியின் போட்டிக் காலத்தில், ஹிலாரி கிளின்டனுக்கு அதிக ஆதரவை, அக்கட்சியின் தேசிய செயற்குழு வழங்குவதாக சான்டர்ஸ் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் முகமாக, இந்த மின்னஞ்சல் அமைந்துள்ளன.

சான்டர்ஸின் பிரசாரக் குழுவால், ஹிலாரியின் வாக்காளர் பற்றிய தரவுகள் அணுகப்பட்ட நிலையில், அதை ஊடகப் பிரசாரமாக, சான்டர்ஸூக்கு எதிராக முன்னெடுக்கப்படவும், கடவுள் நம்பிக்கையற்ற சான்டர்ஸின் நிலைமை குறித்துக் கேள்விகள் எழுப்பப்படவும் கலந்துரையாடப்படும் மின்னஞ்சல்கள் வெளியாகியுள்ளன.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளின்டனையும் அவருக்கான உப ஜனாதிபதியாக டிம் கெய்னையும் உறுதிப்படுத்தும் தேசிய மாநாடு, இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வெளியாகியுள்ள இந்த மின்னஞ்சல்கள், அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X