2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 02 , மு.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஸூமாவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, தோற்கடிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மோசமாகக் கையாண்டதாகக் கூறப்பட்டே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இது, கடந்த ஒரு வருடத்துக்குள், ஜனாதிபதிக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதோடு, ஆளுங்கட்சியின் உதவியுடனேயே, இதனையும் அவர் தோற்கடித்தார்.

ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்திலுள்ள 400 ஆசனங்களில் 249 ஆசனங்களைக் கொண்டுள்ள நிலையில், அக்கட்சியின் ஆதரவு, ஜனாதிபதிக்கு முக்கியமானதாக மாறியது.

தென்னாபிரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டமைப்பு, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தது. நிதியமைச்சர் என்ஹலங்லா நேனேயை, கடந்தாண்டு டிசெம்பரில் பதவி விலக்கியதைத் தொடர்ந்தே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் வவேண்டுவதாகவும், தென்னாபிரிக்காவை அவர் நிதி நெருக்கடிக்குள் தள்ளுவதாகக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .