2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பயங்கரவாதிகளை தூண்டி விடுவதாக பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

Super User   / 2010 ஜூன் 15 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டி விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நம்பிக்கை பற்றாக்குறையை சரி செய்ய இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் எதிர்வரும் 25ஆம் திகதி பாகிஸ்த‌ôன் செல்லவுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டி விடுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளை‌ ஆதரிப்பது இருநாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைக்கும், ஒற்றுமைக்கும் இடையூறு ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

ஜூலை 15ஆம் திகதி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .