2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

மெக்சிகோ தீ விபத்தில் பலி எண்ணிக்கை 30ஆக அதிகரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள மதுபானசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் உள்ள மதுபானசாலையொன்றில் கடந்த 27ஆம் திகதி தீவிபத்து ஏற்பட்டது.

தீவிபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என 23 பேர் பலியானார்கள். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மதுபானசாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X