2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மனைவியைக் கொன்று, படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்தவரின் குற்றம் நிரூபணம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 26 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவியைக் கொன்று, அவர் இறந்த புகைப்படத்தைப் பேஸ்புக்கில் பகிர்ந்த நபரொருவரின் குற்றம், நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவின் தெற்கு மயாமியைச் சேர்ந்த டெரக் மெடினா என்ற இந்நபர், தனது மனைவியான ஜெனிபர் அலோன்சோவை, 2013ஆம் ஆண்டு கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அந்தக் கொலை இடம்பெற்ற பின்னர், தனது மனைவியின் சடலத்தின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த அவர், 'ஆத்மா சாந்தியடையட்டும்" எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, 'எனது மனைவியைக் கொன்றமைக்காக நான், சிறைக்குப் போகிறேன் அல்லது மரண தண்டனைக்குள்ளாகப் போகிறேன்" என்று தெரிவித்ததோடு, தனது மனைவி, தன்னைக் குத்தியிருந்ததாகவும், அதனாலேயே கொன்றிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அவருக்கெதிரான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், அவரது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கான தண்டனை, எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமர்வில் தீர்மானிக்கப்படவுள்ளது. இதன்போது, அவருக்கு ஆயுள் சிறைத்தண்டனையை, வழக்கறிஞர்கள் கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .