2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மலேஷிய பிரதமராக முஹ்யிடின் யசின்

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவின் பிரதமராக முஹ்யிடின் யசின் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவைத் தானே கொண்டிருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் வாக்களிப்பொன்றின் மூலம் அதை நிரூபிப்பேன் என மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் தெரிவித்த சில மணித்தியாலங்களிலேயே பிரதமராக முஹ்யிடின் யசின் பதவியேற்றிருந்தார்.

நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை முஹ்யிடின் யசின் பெற்றிருப்பதாகவும் நேற்று பிரதமராகப் பதவியேற்பார் என மலேஷிய அரச மாளிகை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

மலேஷியாவின் முன்னாள் எதிர்க்கட்சியான ஒன்றிணைந்த மலேஷிய தேசிய நிறுவனக் கட்சி, மலேஷியாவின் இஸ்லாமியக் கட்சி ஆதரவுடன் கூட்டணியொன்றை முஹ்யிடின் யசின் அமைத்திருந்தார்.

முன்னைய மஹதிர் மொஹமட்டின் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் உள்நாட்டமைச்சரான முஹ்யிடின் யசின் காணப்பட்டிருந்தார். மலேஷியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் 2015ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்கள் மோசடி காரணமாக பதவி விலக்கப்பட முன்னர் பிரதிப் பிரதமராக முஹ்யிடின் யசின் இருந்திருந்தார். பின்னர் மலேஷிய தேசிய நிறுவனக் கட்சியிலிருந்து விலகி மஹதிர் மொஹமட்டுடன் இணைந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .