Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 நவம்பர் 23 , மு.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்குக் கரைப் பகுதியில் அதிகரித்துள்ள வன்முறைகள் காரணமாக, மேலும் நால்வர் மரணமடைந்துள்ளனர். இதில் மூவர், பலஸ்தீனர்களாகவும், மற்றையவர் இஸ்ரேலியராகவும் காணப்படுகின்றனர்.
முதல் தாக்குதலில், இஸ்ரேலியரொருவரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பலஸ்தீனப் பெண்ணொருவர், காரால் அடித்து வீழ்த்தப்பட்டதோடு, பின்னர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டார்.
அடுத்து, பலஸ்தீன வாடகைக் கார் ஓட்டுநர் ஒருவர், இன்னொரு காரொன்றை மோதிவிட்டு, கத்தியுடன் வெளியே வரும்போது, சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் படையினர் தெரிவித்தனர்.
மூன்றாவது சம்பவத்தில், இஸ்ரேலியப் பெண்ணொருவரைக் கத்தியால் குத்திய பலஸ்தீனரொருவர், சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், கத்தியால் குத்தப்பட்ட 21 வயதான இஸ்ரேலியப் பெண், பின்னர் மரணமடைந்ததாக, இஸ்ரேலிய அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .