2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யூ-ரியூப், பேஸ்புக் இணையங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை

Super User   / 2010 மே 20 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய விரோத வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி யூ-ரியூப் இணையத் தளத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் குறித்த இணையதளத்தை பாகி்ஸ்தானில் பார்க்க முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் இணையதளத்தை அந்நாட்டு அரசாங்கம் நேற்று முடக்கிய நிலையிலேயே யூ-ரியூப்புக்கும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. குறித்த இணையதளங்களின் சில பக்கங்களில் நபிகள் நாயகம் தொடர்பான புகைப்படங்களை சமர்பிக்குமாறு கூறி சிலர் விஷமச் செயலில் ஈடுபட்டனர்.

இதை எதிர்த்து சில வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து பேஸ்புக் இணையதளத்தை எதிர்வரும் 31ஆம் திகதி வரை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த இணையதளத்துக்கு பாகிஸ்தான் தடை விதித்தது. இந்நிலையில் தனது இணையத்தில் இடம் பெற்ற அந்தப் பக்கங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பேஸ்புக் அறிவித்தது.

இதேவேளை யூ-ரியூபை பாகிஸ்தான் தொலைத்தொடர்புத்துறைப் பிரிவு முடக்கியுள்ளது. அத்துடன் மேற்படி இரு இணையதளத்தின் உரிமையாளர்களும் பாகிஸ்தான் அரசை தொடர்பு கொண்டு உரையாடி, மத நம்பிக்கைகளை புண்படுத்தாத வகையில் தளத்தை நடத்த முன்வரலாம் என்றும் தொலைத் தொடர்புத்துறை கூறியுள்ளது.

இந்த இரு இணையதளங்கள் தவிர பிளிக்கர், என்சைக்ளோபீடியா உள்ளிட்ட மேலும் 450 இணையதளங்களையும் பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.

யூ-ரியூப் இணையதளமானது கடந்த 2008ஆம் ஆண்டிலும் பாகிஸ்தான் முட்க்கியிருந்தது. சீனாவில் பேஸ்புக் மற்றும் யூ-ரியூப் இணைய தளங்களுக்கு நிரந்தரமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--