2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சூடானில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altபஸ் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்தவர்களில் 13 பேர் இறந்துள்ளதாக சூடான் நாட்டு அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த படகானது நேற்று 'வெள்ளை நைல் நதியின்' குறுக்காக  22 பேரை ஏற்றிச் சென்றபோது கவிழ்ந்து மூழ்கியுள்ளதாக பேச்சாளர் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார். இதில் 13 பேர் நீரில் மூழ்கியுள்ளதுடன் 9 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இப்படகில் பயணித்தவர்கள் உறவினர்கள்  மற்றும் நண்பர்கள் என்றும் நேற்று முன்தினம் இரண்டு பஸ்கள் மோதி,  விபத்துக்குள்ளானதில் இறந்த 37 பேரின் மரணச்சடங்கிற்கு சென்றுக்கொண்டிருந்தப்போதே இவ்விபத்து ஏற்பட்டதாக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அப்படகு தலைநகர் கார்ட்டோமிலிருந்து 60 மைல் தெற்கிலுள்ள  அல்டார் நகரில் மூழ்கியுள்ளது. கார்ட்டோமிற்கு அருகிலேயே மேற்படி பஸ் விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பஸ், டிரக் வண்டியொன்றை முன்னால் செல்ல முற்றபட்டப்போது மினி பஸ்ஸொன்றில் மோதி தீவிபத்துக்குள்ளானது. அதனால் 4 சிறுவர்கள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .