2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பாகிஸ்தான் - இந்தியா இடையில் பேச்சுவார்த்தை தொடரும்: இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் கட்டாயமாக நடைபெறுமெனவும் இருநாடுகளுக்குமிடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் எந்தத் தடையும் இல்லை எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானின் லாகூரில் இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக வெளிவந்த செய்தியினை மறுத்திருக்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் மேலும் கூறுகையில்…

பாகிஸ்தானில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அங்கு சென்றிருந்தார். சென்றிருந்த வேளையில் நட்புரீதியிலேயே பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாஹ் மொஹமட் குரேஷியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இந்திய வெளிவிவகார அமைச்சர். கருத்தரங்கில் கலந்துகொள்வதால் இரு தலைவர்களுக்கும் உத்தியோகபூர்வ பேச்சுக்களில் ஈடுபட நேரம் இருந்திருக்காது. உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைகள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் எந்த பிரச்சினையினையும் பேசித் தீர்க்கலாம் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமல் யூஷுப் ரஸா கிலானி அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அதேபோல், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரும் இருநாடுகளுக்குமிடையில் நல்லெண்ணத்தை உருவாக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடிய சாத்தியப்பாடு இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--