2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷுக்கு இருமலுக்கான ஸிறப்பை கடத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் இருமல் நோய்க்கு பாவிக்கப்படும் ஸிறப்பை கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேயர் இராணுவ வீரர் ஒருவரை அந்த நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இராணுவ வீரர் இருமலுக்காக   பாவிக்கப்படும் சுமார் 100  ஸிறப் போத்தல்களை கடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷில் மது பாவனை தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அங்குள்ளவர்கள் மதுபானங்களுக்குப் பதிலாக மேற்படி ஸிறப்பை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்தே  இருமல் நோய்க்காக பாவிக்கப்படும் ஸிறப் இவ்வாறு கடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த ஸிறப்பை அதிகமாக அருந்தும்போது போதை ஏற்படுத்தக் கூடிய தன்மை காணப்படுவதாகவும், இதனால் குறித்த ஸிறப்பை போதைப் பழக்கவழக்கத்திற்கு  அடிமையான மில்லியன் கணக்கானோர் அருந்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஸிறப்பை அதிகமாக அருந்தும்போது ஈரல் போன்ற உடலுறுப்புக்களில்  பாதிப்புக்களை ஏற்படுத்தும் அதேவேளை, நாளடைவில் மரணம் கூட சம்பவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .