2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

நேபாளப் பிரதமர் தெரிவில் மீண்டும் தோல்வி

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேபாளத்தில் இன்று நடைபெற்ற புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான 5 ஆவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

ஐக்கிய நேபாள கம்னியூஸ்ட் கட்சியின்  (மவோயிஸ்ட்) தலைவர் பிரச்சண்டா மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சியின்  உப தலைவர் ராமச்சந்திரா பௌதில் ஆகிய இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கிடையில் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது இருவரும் போதிய எண்ணிக்கையான  வாக்குகளை பெறத் தவறினர்.

ஐக்கிய நேபாள கம்யூனியூஸ்ட் கட்சியின்  (மாவோயிஸ்ட்) தலைவர் பிரச்சண்டா தனக்கு ஆதரவாக 246 வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டார். அவருக்கு எதிராக  111 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில் 206 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சண்டா தொடர்பான வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. 

பிரச்சண்டாவை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாள காங்கிரஸின் உப தலைவர் பௌதில்  தனக்கு ஆதரவாக 124 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். அவருக்கு எதிராக 243 பேர் வாக்களித்திருந்தனர். 200 உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

2007 ஆம் ஆண்டின், நேபாள இடைக்கால அரசியலமைப்பின்படி பிரதமர் பதவிக்கான வேட்பாளர்  601 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 300 வாக்குகளைப் பெறவேண்டும்.

தற்போது நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களுக்கான வெற்றிடம்  உள்ளது.  எம்.பி. பதவியிலிருந்தவர்களில் ஒருவர் இறந்துள்ளதுடன் மற்றுமொருவர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

ஜுலை 21 ஆம் திகதி முதல் இது வரை இடம்பெற்ற 5 தேர்தல்களிலும் பிரச்சண்டாவும் பௌதிலும்; போதிய பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .