2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி‌க் குழுவை அனுப்பத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி‌க் குழுவை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

 அனைத்துக் கட்சியினர் கொண்டதொரு குழுவை காஷ்மீருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுடன், இக்குழுவினர் அங்குள்ள அனைத்து தரப்பு மக்களையும்  சந்திக்க  வேண்டும் என்று நேற்றைய  கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சும், ஜம்மு -காஷ்மீர் மாநில அரசும் இணைந்து இக்குழுவினர் காஷ்மீர் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--