2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

அயோத்தி தீர்ப்பையொட்டி பலத்த பாதுகாப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இன்று வியாழக்கிழமை அயோத்தி விவகாரம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் உத்தரப்பிரதேசம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 10,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, வான்வழியாக ஹெலிகொப்டர்களின் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அயோத்தி தீர்ப்பையொட்டி செல்லிடத் தொலைபேசிகள் மூலம் குறுந்தகவல்கள் அனுப்புவதற்கான தடையை  எதிர்வரும் 2ஆம் திகதி வரை மத்திய அரசு  விதித்துள்ளது. வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி நில விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை இன்று வியாழக்கிழமை  பிற்பகல் 3.30 மணிக்கு தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.

அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம், அங்கு முன்பு கோவில் இருந்ததா என்பதுதான் இந்த 60 ஆண்டு கால வழக்கின் முக்கிய அம்சமாகும்.  இராமர் பிறந்த பூமியாக அயோத்தி நிலம் உள்ளது எனவும் அதில் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலவிவகாரம் தொடர்பில்  இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையால், சுமார் 2000 பொதுமக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--