Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 19 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்யுமாறு பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றமொன்று இன்று சனிக்கிழம மீண்டும் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு டிசெம்பர் 27 ஆம் திகதி பெனாஸிர் பூட்டோ கொலை செய்யப்பட்டபோது ஜெனரல் முஷாரப் ஜனாதிபதியாக பதவி வகித்தார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் எந்த நீதிமன்ற விசாரணைக்காகவும் ஜெனரல் முஷாரப் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லப் போவதில்லை என அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பெனாஸிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டபோது பாகிஸ்தான் தலிபான் தலைவர் பைத்துல்லா மெஹ்சூத் மீது அப்போதைய முஷாரப் தலைமையிலான அரசாங்கம் குற்றம் சுமத்தியது. எனினும் இதில் தான் சம்பந்தப்படவில்லை என பைத்துல்லா மஹ்சூத் கூறிவருகிறார்.
இந்நிலையில் பெனாஸிர் கொலையில் 'விசாலமான சதியில்' ஓர் அங்கமாக இருந்ததாக முஷாரப் குற்றம் சுமத்தப்படுகிறார். எனினும் இக்கொலையில் அவரின் குறிப்பான பங்களிப்பு தொடர்பாக தகவல் எதுவும் இல்லை.
பெனாஸிர் பூட்டோவின் கணவர் அஸீவ் அலி சர்தாரி, தற்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச தரப்பு வழக்குத் தொடுனர்களில் ஒருவர் மேற்படி பிடிவிறாந்து குறித்து கூறுகையில், கடந்த வாரம் ஜெனரல் முஷாரப்புக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆவணத்தை முஷாரப்பிடம் கையளிக்கமுடியவில்லை. இஸ்லாமாபாத்திலுள்ள முஷாரப்பின் வீட்டில் அவர் இல்லை எனக் கூறப்பட்டது.
தற்போது மீண்டும் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் லண்டனில் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் அறிந்துள்ளோம். அவரின் முகவரியை பெற்றுக்கொண்டு பிடிவிறாந்து அறிவித்தலை அவரிடம் கையளிப்போம்' என்றார்.
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Oct 2025
18 Oct 2025