2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஆப்கானில் அமெரிக்க தூதரகம், நேட்டோ தலைமையகம் மீது தாக்குதல்

Super User   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் நேட்டோவின் சர்வதேச பாதுகாப்பு உதவிப்  படைகளின் தலையகத்தை இலக்கு வைத்து இன்று தற்கொலை குண்து; தாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது.  அதேவேளை பகுதிகளவு கட்டப்பட்ட கட்டடிமொன்றிலிருந்த ஆயுத  பாணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது. காபூலிலுள்ள பிரித்தானிய கவுன்ஸில் அலுவலகம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டு, சில வாரங்களில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெற்ற மேற்படி தாக்குதலையும் பிரிட்டனிடமிருந்து 1919 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சுதந்திரம் பெற்றதையொட்டி தாம் நடத்தியதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற வன்முறைகளை நேட்டோ செயலாளர் நாயகம்  அன்ட்ரெஸ் போஹ் ரஸ்முசென் கண்டித்துள்ளார்.  ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பொறுப்பை நேட்டோவிடமிருந்து ஆப்கானிஸ்தான் படைகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைக்கு இதுவொரு சோதனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, 'பாதுகாப்பு நிலைவரத்தை கையாள்வதில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளின் ஆற்றலில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0

 • sb Saturday, 01 October 2011 08:36 PM

  எல்லாதுக்குள்ளும் மூக்கை நுழைக்கும் வல்லமை மிக்க நேட்டோவுக்கே தற்கொலை தாக்குதலா? இதைக்கூட தடுக்க வக்கில்லையா அல்லது நீங்களே செய்துகொண்டு தலிபான்கள வம்புக்கு ilukkureengalaa? pohappoha puriyum.

  Reply : 0       0

  aj Wednesday, 14 September 2011 06:01 AM

  வன்மையாக கண்டிக்க வேண்டியது.

  Reply : 0       0

  xlntgson Wednesday, 14 September 2011 09:13 PM

  schadenfreud அமெரிக்காவில் பூகம்பம் என்றால் மகிழ்கின்றவர்களைப் போல்! இவ்வருடம் நன்றாக குளிர் பிடித்து ஆட்டட்டும் என்று அய்மான் அல்சவாஹிரி- புதிய அல்கைதா தலைவர் பிரார்த்திக்கிறாராம், நீங்கள் ஆப்கானிஸ்தானுக்கா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X