2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அமெரிக்க ஜனாதிபதி - ஆங் சான் சூகி சந்திப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மியன்மாருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று அங்கு சென்றடைந்துள்ளார்.

அவருடன் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனும் சென்றுள்ளார்.  இந்த இருவருக்கும் மியன்மாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

வீதிகளுக்கு இருமருங்கிலும் உள்ள மதில்களில் ஒபாமாவே வருக என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. ஒபாமாவின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்த ரி சேர்ட்டுக்கள் வியாபார நிலையங்களில் தொங்கவிடப்பட்டிருந்தன. அது மட்டுமன்றி அமெரிக்கக் கொடி விமான நிலையம் முதல் பிரதான நகரங்களில் ஏற்றிவைக்கப்பட்டிருந்தன.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மியன்மார் ஜனாதிபதி தெய்ன் செய்னை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மியன்மார் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வாகனத் தொடரணி சென்ற வீதிகளின் இருமருங்கிலும் குழுமியிருந்த  மக்கள் அமெரிக்க தேசியக்கொடியினை அசைத்து  வரவேற்றனர்.

இதேவேளை, ஜனநாயகத்தை ஆதரிக்கும்  தலைவரான ஆங் சான் சூகியை சந்தித்து பராக் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தியதுடன், ரங்கூன் பல்கலைக்கழகத்திலும் அவர் விசேட உரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்.

மியன்மாரில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இராணுவ ஆட்சியின் இறுதியிலிருந்து மியன்மார் ஜனாதிபதி தெய்ன் செய்னினால் முன்வைக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் கூறியுள்ளன. படங்கள்:- சி.என்.என்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .