2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

துருக்கிய இராணுவத்தின் முன்னாள் பிரதானி தடுப்புக்காவலில்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய சார்பு அரசாங்கத்தை 1997ஆம் ஆண்டு பதவி இழக்கச் செய்த இராணுவத் தலையீட்டுடன் தொடர்புள்ளவர் என குற்றஞ்சாட்டப்பட்ட துருக்கிய இராணுவத்தின் முன்னாள் பிரதானியான ஜெனரல் இஸ்மையில் ஹக்கி கரடாயி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முதலில் இஸ்தான்புல்லிலுள்ள அவரது வீட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட அவர், பின்னர் விசாரணைக்காக தலைநகரான அங்காரவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

படை வீரர் எவரும் ஈடுபடாதமையால் பின் நவீனத்துவ புரட்சி என அறியப்படும் சதிப்புரட்சிக்கு உதவியவராக இவர் சந்தேகிக்கப்படுகின்றார். இந்தப் புரட்சியால் முன்னாள் இஸ்லாமிய சார்பு பிரதமராக நெக்மெட்டின் 1997ஆம் ஆண்டு தனது பதவியை துறக்க வற்புறுத்தப்பட்டார்.

சமய சார்பில்லாத துருக்கியின் அரசியலமைப்பின் பாதுகாவலர் தானே என துருக்கிய இராணுவம் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .