2021 மே 06, வியாழக்கிழமை

மாயமான விமானம், 54 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிப்பு

George   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

54 ஆண்டுகளுக்கு முனனர் கால்பந்து வீரர்களுடன் மாயமான விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிலி நாட்டில் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி லான் சிலி டக்ளஸ் டிசி-3 என்ற விமானம் காணமல் போனது.

இந்த விமானத்தில் சிலி நாட்டு கால்பந்தாட்ட அணியின் வீரர்கள், நடுவர்கள் உட்பட 24 பேர் பயணம் செய்தனர்.

ஆனால், இந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை எதுவும் தெரியாமல் இருந்தது. இதனால் இந்த விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது சான்டியகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மௌலே பகுதியில் 54 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன அந்த விமானத்தின் பாகங்களை மலையேறும் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விமானத்தின் பாகங்களுடன் அப்பகுதியில் ஏராளமான மனித எலும்புகளும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .