2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

முற்றுகை நிறைவு: குறைந்தது 12 பேர் பலி

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாலியில் ஏறத்தாழ இருபத்து நான்கு மணிநேரமாக இஸ்லாமிய துப்பாக்கிதாரிகள் என சந்தேகிக்கப்படுவோர்களால் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த ஹொட்டலொன்றின் கட்டடத்துக்குள் பாதுகாப்புப் படைகள் நுழைந்ததில், குறைந்தது 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அதனுள் சிக்கியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சில பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் நான்கு ஐ.நா ஒப்பந்தக்காரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாவும், ஆனால் இந்தத் தாக்குதல் நடவடிக்கையுடன் தொடர்புடைய ஐந்து பேர் கொல்லப்படதாக மாலியில் ஐ.நாவின் சமாதான நடவடிக்கையில் ஈடுபடும் எம்‌.ஐ.‌என்‌.யு‌.எஸ்.‌எம்.‌ஏ தெரிவித்துள்ளது. இதேவேளை, மூன்று பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக மாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஐந்து படை வீரர்களும், வெடிகுண்டுகளை தனது உடலில் கட்டி வைத்திருந்தவர் உட்பட நான்கு துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை காலையில் மாலி தலைநகர் பமகோவில் இருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செவரே நகரின் பைப்லோஸ் ஹொட்டலே துப்பாக்கிதாரிகளின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்ததைத் தொடர்ந்து அரசாங்கத் துருப்புக்களால் உடனடியாக சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .