2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

காபூல் தாக்குதல்: 5 பேர் மரணம்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் விமான நிலையத்தின் உட்செல்லும் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், ஆகக்குறைந்தது ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். அத்தோடு, 17 பேர் காயமடைந்துள்ளனர்.

பொதுமக்கள் செல்லும் வழியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதோடு, கார்க் குண்டுத் தாக்குதலே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, இத்தாக்குதலுக்கான உரிமையை, ஆப்கான் தலிபான்கள் கோரியுள்ளனர்.

முன்னதாக, குண்டூஸ் மாகாணத்திலுள்ள ஆயுதக் குழுவொன்றின் தளத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், குறைந்தது 29 பேராவது மரணம டைந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .