2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,981ஆக உயர்ந்தது

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது நேற்றைய முடிவில் 2,981ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, சீனாவில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 80,270ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19-ஆல் 5,621 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், குறைந்தது 32 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான கொரிய நிலையங்கள் இன்று தெரிவித்துள்ளன.

இதேவேளை, இத்தாலியில் COVID-19-ஆல் 79 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 2,502 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், ஈரானில் COVID-19-ஆல் 77 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 2,336 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், நெருக்கடியான சிறைச்சாலைகளில் COVID-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக 54,000க்கும் அதிகமான கைதிகளை ஈரான் விடுவித்துள்ளது.

இதேவேளை, வேகமாகப் பரவும் COVID-19 உடன் போராடுவதற்கான பாதுகாப்பு உபகரணத்துக்கான பூகோள ரீதியிலான தட்டுப்பாடொன்று மற்றும் விலை தொடர்பாக நேற்று  எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், தயாரிப்புகளை 40 சதவீதத்தால் அதிகரிக்குமாறு நிறுவனங்களையும், அரசாங்கங்களையும் கோரியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .