Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மே 15 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி, ஒரு இந்து என்று, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருந்த கருத்துக்கு, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியவண்ணமுள்ளன.
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தல், எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே, கமல், மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
“காந்தி சிலை முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன், பெயர் நாதுராம் கோட்சே. காந்தியின் கொள்ளுப் பேரனான நான், அந்தக் கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன்” என்று பேசியிருந்தார்.
கமலின் இந்தப் பேச்சு, தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையைக் களிப்பியுள்ளது. அதேநேரம், தமிழக காங்கிரஸ் கட்சி, கமலின் கருத்தை வரவேற்றுள்ளது. இதனால், கமலின் இந்து தீவிரவாதி பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
உலறர் நாயகன்
உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது உளறல் நாயகனாக மாறி வருகிறார் என்று பா.ஜ.கவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளர்.
அரசியலில், கமல்ஹாசன் கத்துக்குட்டி என்றும் அவர், பிரிவினைப் பற்றி பிரசாரம் செய்வதாகவும் ஒழுக்கமான காந்தியின் பேரன் என்று சொல்வதற்கு, கமல்ஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை எனவே, கமல்ஹாசனின் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவரது கட்சியின் அங்கிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
'ஐ.எஸ் -இடம் பணம் வாங்கிவிட்டார்'
கமல்ஹாசன், ஐ.எஸ் அமைப்பிடம் பணம் வாங்கிவிட்டாரா என்று கேள்வியெழுப்பியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். அத்தோடு, மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்யவேண்டும் என்றும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
“பயங்கரவாதத்துக்கு மதம் கியைாது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக ஹிந்துவும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழும் நாட்டில், பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார் கமல். இலங்கையில், தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ள நிலையில், ஏராளமான முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பாதுகாப்பான இடங்களைத் தேடிச் செல்கின்றனர். இது போன்ற நிலைமை, இங்கும் ஏற்பட வேண்டுமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது. இலங்கையில், தாக்குதல் நடந்த நிலையில், கமலின் பேச்சு தேவையா? ” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கமலுக்கு எதிராக புகார்
கமலுக்கு எதிராக, டெல்லி தேர்தல் ஆணையத்தில், பா.ஜ.க சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன், தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்றும் எனவே, அவரது கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறைந்தது 5 நாள்களாவது, அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
ரஜினி மறுத்தார்
கமலின் இந்தப் பேச்சு தொடர்பாக கருத்துத் தெரிவிக்க, ரஜினிகாந்த மறுப்பு தெரிவித்துள்ளார்.
“இது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை” என்று மாத்திரமே அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிந்து சேனாவின் வழக்கு
கமல்ஹாசனுக்கு எதிராக, ஹிந்து சேனா அமைப்பு, டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
தீவிரவாதத்தோடு இந்து மதத்தை தொடர்புப்படுத்தி பேசியதன் மூலம், இந்து மக்களின் மத உணர்வுகளை கமல்ஹாசன் காயப்படுத்தி விட்டதாக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு, நாளை (15) விசாரணைக்கு வரவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
6 minute ago
12 minute ago
14 minute ago