2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

சோமாலியாவில் கலவரம்; 14பேர் பலி

Super User   / 2010 மே 23 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலியாவில் நடந்த கலவரத்தில் பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சோமாலியா நாட்டை மையமாக கொண்டு இயங்கும் அல்குவைதாவின் ஆதரவு இயக்கமான செபாப் அமைப்பைச் சேர்ந்த சிலர் நேற்றிரவு அந்நாட்டு ஜனாதிபதி மா‌ளிகைக்குள் அதிரடியாக நுழைய முயன்றுள்ளனர்.

இதன்போது பாதுகாப்பு படையினருக்கும் , தடை செய்யப்பட்ட செபாப் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது சிக்குண்ட பொதுமக்களில் 14பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவத்தை அடுத்து அங்கு தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X