2020 ஓகஸ்ட் 13, வியாழக்கிழமை

நியூ ஹம்ப்ஷையர் முதன்மைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் சாண்டர்ஸ் வென்றார்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான நியூ ஹம்ப்ஷையர் முதன்மைத் தேர்தலில், ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் செளத் பென்ட் நகர முன்னாள் மேயரான பீற் புடிசிச்சை மயிரிழையில் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சான்டர்ஸ் வென்று, நியூ ஹம்ப்ஸையரில் தனது வெற்றியை இன்று காலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஏறத்தாழ அனைத்து நகரங்களின் வாக்களிப்புகளும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்புக்கு முன்பதாக கருத்துக்கணிப்பில் முன்னிலையிலிருந்த பேர்ணி சான்டர்ஸ், 26 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை பீற் புடிசிச் 24.4 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் மினியோஸ்டா செனட்டரான அமி குளோபச்சர் 19.7 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்த வாக்கெடுப்பில் மஷெட்ஸ் செனட்டரான எலிஸபெத் வொரன் மூன்றாமிடத்தையும், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் நான்காமிடத்தையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--