2021 மார்ச் 06, சனிக்கிழமை

முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற இத்தாலி பிரதமர்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலிய நாடாளுமன்ற கீழ்ச் சபையில் முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றில், அந்நாட்டுப் பிரதமர் ஜுசுப்பெ கொன்டே நேற்று வென்றுள்ளார்.

இவ்வாக்கெடுப்பில் பிரதமர் கொன்டே தோற்றிருந்தால், அவர் இராஜினாமா செய்யப்பட வைக்கப்பட்டிருப்பார்.

எதிரணியிடமும், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தன்னை ஆதரிக்குமாறு பிரதமர் கொன்டே கோரியதைத் தொடர்ந்து, அவரது அரசாங்கமானது 321-259 என்ற வாக்குகள் ரீதியில் வென்றிருந்தது.

629 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் குறித்த எண்ணிக்கையானது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகம் என்பதுடன், பெரும்பான்மையையும் அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், செனட்டில் இன்றிரவு கடினமான சோதனையை பிரதமர் கொன்டே எதிர்கொள்ளவுள்ளார். ஏனெனில், அவரது கூட்டணியிலிருந்து முன்னாள் பிரதமர் மட்டியோ றென்ஸியின் கட்சி விலக முன்னரே சிறியளவு பெரும்பான்மையையே அவரது கூட்டணி செனட்டில் கொண்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .