2026 மார்ச் 26, வியாழக்கிழமை

முன்னிலையில் மேர்க்கெல்

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் பொதுத் தேர்தல், இன்னும் 3 வாரங்களில் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், 4ஆவது தடவையாகவும் அப்பதவியை வகிப்பதற்கான முன்னிலையை உறுதிசெய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தைத் தொடர்ந்தே, அவரது முன்னிலை உறுதியாகியுள்ளது.

மக்கள் அதிகமாகப் பார்வையிடும் நேரத்தில் இடம்பெற்ற இந்தத் தேர்தல் விவாதம், மில்லியன்கணக்கான மக்களைத் தன் பக்கம் இழுப்பதற்கு, மேர்க்கெலின் போட்டியாளரான மார்ட்டின் ஷுல்ஸுக்குக் காணப்பட்ட இறுதி வாய்ப்பாகக் கருதப்பட்டது.

ஆனால், 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விவாதத்தின் முடிவில், மேர்க்கெலுக்குத் தெளிவான முன்னிலை கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேர்க்கெலை, சுவாரசியமற்றவர் எனவும் மக்களை உறங்க வைக்கிறார் எனவும் முன்னர் குற்றஞ்சாட்டியிருந்த ஷுல்ஸ், விவாதம் ஆரம்பித்தமை முதல், ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, அந்நாட்டின் அரசியலில் பிரதான பேசுபொருளாக மாறியுள்ள அகதிகள் விவாதம் தொடர்பாக, அவர் மேர்க்கெலைத் தாக்கினார்.

அகதிகள் விடயத்தில், ஐரோப்பிய ஒன்றிய அயலவர்களுடன், இணைந்து செயற்படுவதற்கு அவர் தவறிவிட்டார் என, ஷுல்ஸ் குற்றஞ்சாட்டினார். ஆனால் பதிலடி வழங்கிய மேர்க்கெல், “சான்செலராக இருக்கும் போது, விரைவான முடிவெடுத்தல் தேவைப்படுகின்ற தருணங்கள் காணப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

அடுத்ததாக, ஐரோப்பிய ஒன்றியத்தில், துருக்கி இணைக்கப்படக்கூடாது என, தன்னுடைய விவாதப் பொருளை ஷுல்ஸ் எடுக்க, “ஒன்றியத்தில் அவர்கள் எப்போதாவது நுழைவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என உறுதியாகப் பதிலளித்து, மேர்க்கெல், அவ்விடயத்தில் சிறப்பான பதிலடியை வழங்கினார்.

விவாதத்துக்குப் பின்னரான கருத்துக் கணிப்பில், மேர்க்கெல் சிறப்பாகச் செயற்பட்டார் என 55 சதவீதமான வாக்காளர்களும், ஷுல்ஸ் சிறப்பாகச் செயற்பட்டார் என 35 சதவீதமான வாக்காளர்களும் தெரிவித்தனர். இரு கட்சிகளுக்குமிடையில், 17 சதவீத ஆதரவு வித்தியாசம் காணப்படுகின்ற நிலையில், அதை மேர்க்கெல் தொடர்ச்சியாக உறுதிசெய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .