2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

‘லிபிய ஆயுதத் தடையை மீறிய ட்ரம்ப்பின் நட்புறவாளர்’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியா மீதான ஐக்கிய நாடுகளின் ஆயுதத் தடையொன்றை, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய நட்புறவாளரான தனியார் பாதுகாப்பு ஒப்பந்தக்காரரான எரிக் பிறின்ஸ் மீறியுள்ளதாக, ஐ. அமெரிக்க ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையொன்றில் ஐ.நா விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பாதுகாப்புச் சபைக்கான குறித்த இரகசிய அறிக்கையானது நியூ யோர்க் டைம்ஸ், வொஷிங்டன் போஸ்டால் பெறப்பட்டதுடன், அல் ஜஸீராவால் பகுதியளவில் பார்க்கப்பட்டுள்ளது.

ஐ.நாவால் அங்கிகரிகரிக்கப்பட்ட லிபிய அரசாங்கத்தை அகற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு மோதலில் ஈடுபட்ட இராணுவத் தளபதி காலிஃபா ஹஃப்தாருக்கு வெளிநாட்டு கூலிப்படைக்காரர்கள் படையொன்றையும், ஆயுதங்களையில் பிறின்ஸ் தரையிறக்கியுள்ளார் என கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் சிலர் உள்ளடங்கலாக ஹஃப்தாருக்கெதிரான லிபிய இராணுவத் தளபதிகளை தேடிச் சென்று கொல்வதற்காக கொலைக் குழுவொன்றை அமைப்பதற்கான திட்டங்களும் 80 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் நடவடிக்கையில் காணப்பட்டதாக நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .