2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

ஹிலாரியை ஆதரித்தார் சான்டர்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 13 , மு.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிக நீண்டகாலமாக நீடித்த ஜனநாயகக் கட்சிக்கான வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்கான போட்டியில், இறுதிவரை மோதிய ஹிலாரி கிளின்டனும் பேர்ணி சான்டர்ஸூம், இறுதியில் சமரசத்துக்கு வந்துள்ளனர். அக்கட்சியின் உத்தேச வேட்பாளரான ஹிலாரி கிளின்டனை, பேர்ணி சான்டர்ஸ் ஆதரிப்பதாக அறிவித்துள்ளதையடுத்தே, இந்தப் போட்டி முடிவுக்கு வந்துள்ளது.

வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்குத் தேவையான பிரதிநிதிகளின் ஆதரவை ஹிலாரி பெற்றுக் கொண்ட போதிலும், இம்மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாடுவரை, போட்டியிலிருந்து விலகப் போவதில்லையென சான்டர்ஸ் தெரிவித்து வந்தார்.

இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்தன. இறுதியில், நியூ ஹம்ப்ஷையரில் உள்ள போர்த்மௌத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், ஹிலாரியும் சான்டர்ஸூம் ஒன்றாகத் தோன்றினர்.

"செயலாளர் கிளின்டன், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் வெற்றிபெற்றுள்ளார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்" என சான்டர்ஸ் தெரிவித்தார். "ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவரே இருப்பார். ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக அவர் வருவதை உறுதிசெய்வதற்காக, என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய நான் எதிர்பார்க்கிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சான்டர்ஸின் ஆதரவுக்காக நன்றி செலுத்திய ஹிலாரி, "உங்களோடு இணைந்து மோதியமை குறித்துப் பெருமையடைகிறேன். நாம் ஒன்றாக அதிக பலத்துடன் உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குடியரசுக் கட்சியின் உத்தேச வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தனது உப ஜனாதிபதிக்கான தெரிவை, நாளை வெள்ளிக்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவு வழங்கியமைக்காக, சான்டர்ஸை அவர் விமர்சித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .