2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஜனாதிபதி தங்கக் கிண்ணத் தொடரில் நுவரெலியா மாவட்ட இறுதிப்போட்டி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 40 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் ஜனாதிபதி தங்கக் கிண்ணக் கரப்பந்தாட்டத் தொடரின் நுவரெலியா மாவட்ட இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா பொது உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இவ் இறுதிப் போட்டியை  விளையாட்டுத்துறை அமைச்சர் சீ.பி.ரட்னாயக்க , பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா,  நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர்களான  வேலுசாமி இராதாகிருஷ்ணன், பி.திகாம்பரம், நவீன் திசாநாயக்க,  பி.இராஜதுரை மாநகர முதல்வர் சந்தனலால் கருணாரத்ன, மாநகரசபை உறுப்பினர் திஸ்ஸ செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் பங்குபற்றிய வீர , வீராங்கனைகளுக்கு பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் டிலான் பெரேரா, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  வேலுசாமி இராதாகிருஷ்ணன் ,பி.இராஜதுரை ஆகியோர் சான்றிதழ்களை வழங்குவதை படத்தில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--