2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை கோல் மைன் விளையாட்டுக் கழகம் சம்பியன்

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் சாய்ந்தமருது பிளேங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மாலை கடற்கரை முற்றவெளியில்  நடைபெற்றது.

சேர்மன் 2010 வெற்றிக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மருதமுனை கோல் மைன் விளையாட்டுக் கழகமும் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகமும் மோதின.

3௧ என்ற கோல் அடிப்படையில் சேர்மன் 2010 வெற்றிக் கிண்ணத்தை  மருதமுனை கோல் மைன் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக் கொண்டது.
 
பிளேங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.ஏ.பசீர், ஓய்வு பெற்ற சிரேஷ்ட விளையாட்டுத்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா என பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் உதைபந்தாட்ட வரலாற்றில் கடற்கரை கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .