2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

பாடசாலைகளுக்கிடையிலான றகர் போட்டியில் கொழும்பு புனித ஜோஷப் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2011 ஜூன் 12 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கொழும்பு புனித ஜோஷப் கல்லூரிக்கும் கண்டி தர்மராஜ கல்லூரிக்குமிடையில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான றகர் போட்டியில் 19:17 என்ற புள்ளி வித்தியாசத்தில் புனித ஜோஷப் கல்லூரி வெற்றி பெற்றது.

இப்போட்டி கண்டி போகம்பறை மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

போட்டியின் முதற் பகுதியில் 12:12 என்ற வீதத்தில் இரு அணியும் சம புள்ளிகளை பெற்றுக்கொண்டன.
 
போட்டியின் முடிவில் ஜோஷப் கல்லூரி அணி 19 புள்ளிகளையும் தர்மராஜ கல்லூரி 17 புள்ளிகளையும் பெற்றன.

புனித ஜோஷப் கல்லூரி இரண்டு கோல்கள் ஒரு ட்ரை உள்ளடஙகளாக 19 புள்ளிகளையும், தர்மராஜ கல்லூரி ஒரு கோல்  இரண்டு ட்ரை உள்ளடங்களாக 17 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X