2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

வலைப்பந்தாட்ட போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் சம்பியன்

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கு.சுரேன்)

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியினால் சங்கானைக் கோட்டப் பாடசாலைகளின் 14 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையில் நடைபெற்ற வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் சம்பியனாகியுள்ளது.

மேற்படி சுற்றுப்போட்டியின் இறுதி மற்றும் மூன்றாமிடங்களுக்கான போட்டி நேற்று வெள்ளிக்கிழமை கல்லூரியின் வலைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்றது.

இறுதிபோட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயமும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் அபாரமாக ஆடிய சரஸ்வதி மகா வித்தியாலயம் வெற்றி பெற்று சம்பியனாகியது. மூன்றாமிடத்தினை வட்டு. மத்திய கல்லூரி பெற்றுகொண்டது.

வெற்றிபெற்ற அணிகள், வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் நோயல் விமலேந்திரன் வழங்கினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .