2021 ஜனவரி 27, புதன்கிழமை

சாவகச்சேரி இந்துக் கல்லூரி சம்பியன்

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

தென்மராட்சி வலயப் பாடசாலைகளின் 16 வயது பிரிவு அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டிகள் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதயக் கல்லூhயில் நடைபெற்றது.

மேற்படி போட்டிகளின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதலில் நடைபெற்ற அரையிறுதியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியினை எதிர்த்து நாவற்குழி மகா வித்தியாலயம் மோதியது. இந்தப் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதியில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியை எதிர்த்து மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் மோதியது. இந்தப் போட்டியில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியும் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் கோல் அடிக்கும் வாய்ப்புக்கள் பின்கள வீரர்களினால் தடுக்கப்பட்டது. இருந்தும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி கோல் ஒன்றினைப் பெற்று தென்மராட்சி வலய சம்பியனாகியது.

மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் நாவாற்குழி மகா வித்தியாலயம் 2:0 என்ற கோல் கணக்கில் மீசாலை வ|Pரசிங்கம் மகா வித்தியாலயத்தை வென்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .