2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரி வெற்றி

Kogilavani   / 2012 நவம்பர் 22 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                        (கு.சுரேன்)
இலங்கை கிரிக்கெட் சங்கத்தினால் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 13 வயது பிரிவினருக்கிடையில் நடத்தப்பட்டுவரும் மட்டுப்படுத்தப்படாத ஓவர்களை கொண்ட ஒரு நாள்   கிரிக்கெட் போட்டி  ஒன்றில்  யாழ். இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

யாழ். இந்துக் கல்லூரி மைதமானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அணியினை எதிர்த்து மகாஜனாக் கல்லூரி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.இந்துக் கல்லூரி அணி முதலில் மகாஜனாக் கல்லூரியினை துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அதற்கிணங்க தமது முதலாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய மாகாஜன கல்லூரி 35.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பாக ஸ்ரீராம் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஸ்ரீராம் 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

11 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸினைத் துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 15.4 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சார்பாக ஜனுசன் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.

39 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸினை துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 9.3 ஓவர்களில் அணி 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .