2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கிரிக்கெட் காலிறுதியில் யங் ஒலிம்பிக்ஸ் கழகம் வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும்  சுற்றுப்போட்டியில்  முதலாவது காலிறுதி போட்டி நேற்று  சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் யங் ஒலிம்பிக்ஸ் கழகத்தை எதிர்த்து யுங்கோட் ரெட் கழகம் மோதியது. இதில் யங் ஒலிம்பிக்ஸ் கழகம் 206 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற யங் ஒலிம்பிக்ஸ் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப் பரிமாற்றங்களில்  49.3 பரிமாற்றங்களில் சகல விக்ன்;கட்டுக்களையும் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ரொகான் 59 பந்துகளுக்கு 56 ஓட்டம், பி.திலக்சன் 65 பந்துகளுக்கு 82 ஓட்டம்,  டிரோன்ஸ் 37 பந்துகளுக்கு 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் யங் கோட் ரெட் கழகத்தின் சார்பில்  லோகன் 2 விக்கட், காண்டீபன் 05 விக்கட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்

பதிலுக்கு களம் இறங்கிய யங்கோட் ரெட் கழகம்  26.4 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து  வெறும் 87 ஓட்டங்;களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.

நிரோஷன் 20, நிக்சன் 13 ஓட்டம் பந்து வீச்சில் யங் ஒலிம்பிக்ஸ் கழகத்தின் சார்பில்  பிரதீஸ்  06 விக்கெட்டுக்களையும்  டிரோன் 1 விக்கெட்டினையும் பெற்றுக் கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X