2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மறைந்த அதிபர் எஸ்.தனபாலன் ஞாபகார்த்தமாக யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் நடத்தப்படும் அணிக்கு 6 பேர் கொண்ட (5 ஓவர்கள்) கடினப்பந்து துடுப்பாட்டப் போட்டி இன்று(25) ஆரம்பமாகியுள்ளது.

முதற் சுற்றுப் போட்டிகள் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானங்களில் இன்று(25) நடைபெறுவதுடன், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நாளை(26) சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சுற்றுப்போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சம்பியனாகியிருந்தது.

தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணயும், 2010 ஆம் ஆண்டு தொடக்கம 2013 ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற போட்டிகளில்; கொக்குவில் இந்து கல்லூரி அணயும்p சம்பியன் பட்டத்தை தமதாக்கி கொண்டிருந்தன.

இம்முறை சுற்றுப்போட்டியில் 12 பாடசாலை அணிகள் பங்குபற்றுவதுடன் முதற்சுற்றுப் போட்டிகள் லீக் முறையில் நடைபெற்று 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டு காலிறுதிப் போட்டிகள் இன்று(25) நடைபெறும்.

தொடர்ந்து நாளை (26) அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Mutabi3 Sunday, 27 April 2014 04:32 AM

    மென் பந்து, வன் பந்து, இலகு பந்து, கடினப் பந்து... சொற்கள் கண்டு பிடிக்கத் தேவையில்லாத அளவுக்கு சொற்கள் தாராளமாகவே உள்ளன...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--