2021 மார்ச் 08, திங்கட்கிழமை

குறிபார்த்துச் சுடுதலில் கடற்படை சம்பியன்

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறிபார்த்துச் சுடுதல் சம்பியன்ஸிப் தொடரில், பகிரங்கப் பிரிவில் இடம்பெற்ற போட்டிகளில், கடற்படை பெண்கள் அணி ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இப்போட்டிகள், ஹந்தானையிலுள்ள மத்திய மலைநாட்டு சுடுதல் கழகத்தின் சுடும் அரங்கில் இடம்பெற்றன.

பகிரங்கப் பிரிவில் சம்பியன் பட்டம் வெல்வதற்காக, கடற்படையின் பெண்கள் அணியைச் சேர்ந்த வீராங்கனைகளான டபிள்யூ.ஜி.எஸ் பிரியதர்ஷனி, யு.எஸ் றொட்ரிகோ, டபிள்யூ.எம்.என்.ஆர் குமாரி ஆகியோர் அடங்கிய குழு, அனைத்து ஆண், பெண் அணிகளையும் தோற்கடித்திருந்தனர். இலங்கையின் துப்பாக்கிச் சூடு போட்டிகளின் வரலாற்றில், இது முதன்முறையாக இடம்பெற்றிருந்தது.

தேசிய றைஃபிள் சங்கத்துடன் இணைந்து, மத்திய நாட்டு சுடுதல் கழகத்தினால் இத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .