2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நிந்தவூரில் பூப்பந்தாட்டத் தொடர்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 04 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

நிந்தவூர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தினுடைய ஒழுங்கமைப்பின் கீழ் எச்.எம்.வை.எல் அமைப்பின் பிரதான அனுசரனையுடன் நடத்தப்பட்ட பூப்பந்தாட்டத் தொடரில் உசாமா, ஹிசாம் ஆகியோர் சம்பியனாகினர்.

நிந்தவூர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், ஜிஸ்லி, பயாஸ் ஆகியோரை வென்றே உசாமா, ஹிசாம் ஆகியோர் சம்பியனாகியிருந்தனர்.

இறுதிப் போட்டிக்கு, பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமும், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் கல்முனை பிராந்திய பிரதான மின் பொறியியலாளர் முகம்மத் ஹைகல் உட்பட இன்னும் பல முக்கிய அதிதிகளும் கலந்து கொண்டனர்.

மூன்று நாள்கள் நடைபெற்ற இத்தொடரில் சம்பியனான உசாமா, ஹிசாமுக்கு 15,000 ரூபாய் பணமும்  கிண்ணமும் ,இரண்டாமிடம்பெற்ற ஜிஸ்லி, பயாஸுக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .