2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஜொனியன்ஸ் அணி 5 இலக்குகளால் வெற்றி

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு அவை யாழ். மாவட்டத்தில் அழைக்கப்பட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 பந்துபரிமாற்றங்கள் கொண்ட துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் ஜொனியன்ஸ் அணி 5 இலக்குகளால் வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற போட்டியில் யாழ். சென்றல் அணியினை எதிர்த்து ஜொனியன்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி 39 பந்து பரிமாற்றங்களில் 174 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் எஸ்.சலிஸ்ரன் 31, என்.யசிந்தன் 28, எஸ்.றொகான் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஜொனியன்ஸ் அணி சார்பாக எஸ்.அகிலன் 4 (24), பி.லவேந்திரா 3 (27) இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து 175 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஜொனியன்ஸ் அணி 37.5 பந்துபரிமாற்றங்களில் 5 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஏ.ரஜிந்தன் 52, பி.லவேந்திரா 29, எஸ்.அம்புஜன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்றல் அணி சார்பாக எஸ்.சுபதீஸ் 2 (30) இலக்குகளைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஜொனியன்ஸ் அணியினைச் சேர்;ந்த பி.லவேந்திரா (3 இலக்குகள், 29 ஓட்டங்கள்) தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .