2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

2010ஆம் ஆண்டின் கல்முனை வலய சதுரங்க சம்பியனாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி தெரிவு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை வலயமட்ட ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கிடையிலான இறுதி சதுரங்கப் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையின் ஆரம்ப பிரிவு கேட்போர் கூடத்தில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபிக்கின் வழிகாட்டலில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிதராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெஸ்லி உயர்தர பாடசாலையின் அதிபர் வ.பிரபாகரன் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

கல்முனை வலயத்தின் ஐந்து கோட்டங்களிலும் இருந்து தெரிவாகிய பத்து பாடசாலைகளின் 60 மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி 17 புள்ளிகளைப் பெற்று 2010ஆம் ஆண்டின் கல்முனை வலய சதுரங்க சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயமும் 9.5 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்கு நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையும் தெரிவாகியதுடன் வோட் சம்பியனாக கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X