2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

நினைவு கூரல்

Kogilavani   / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் நண்பர்கள் இலக்கியக் குழுவின் ஏற்பாட்டில் மறைந்த எழுத்தாளர்களான ஜெயகாந்தன், ப.ஆப்டீன் ஆகியோரை நினைவுக் கூறும் நிகழ்வு,  எதிர்வரும்  சனிக்கிழமை(21), கெகிறாவ ஹோட்டல் சஹன்யாவில் காலை 9.30.மணிக்கு  நடைபெறவுள்ளது.

'எங்கள் நினைவுகளில்' எனும் மகுடத்தின் கீழ், கெகிறாவ ஸூலைஹாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், தொடக்கவுரையை அன்பு  ஜவஹர்ஷாவும்  ஜெயகாந்தன், ப.ஆப்டீன்  ஆகியோரைப் பற்றிய நினைவுரைகளை மேமன்கவியும் நிகழ்துவர்.

இவ்விழாவில்  'ப.ஆப்டீனின் படைப்புலகம்' எனும் தலைப்பில் நாச்சியாதீவு பர்வீனும் 'ஆப்டீனை நினைத்து... ' எனும் தலைப்பில் எஸ்.ஏ.ஏ.ஹலீமும் உரையாற்றுவர். இதேவேளை, 'ஜெயகாந்தன் என்கின்ற ஆளுமை' எனும் தலைப்பில் கிண்ணியா சபறுள்ளாவும் 'ஜெயகாந்தனை நினைத்துப் பார்க்கிறேன் ' என்ற தலைப்பில கெகிறாவ சஹானாவும் உரையாற்றுவர்.

'ஜெயகாந்தனை வாசித்தல்' எனும் தலைப்பில் உயர் வகுப்பு மாணவர்கள் கருத்துரைகள் வழங்குவர்.        
இந்நிகழ்வில் ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்'  திரைப்படத்தை முன் வைத்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் நன்றியுரையை வஸீம் அக்ரம் நிகழ்த்துவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X